பெண் காவலர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி :

By செய்திப்பிரிவு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் காவலர்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி டீன் ஏ.ரத்தினவேல் தலைமையில் நடந்தது.

மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். காவல்துறை துணைத் தலைவர் என்.காமினி முன்னிலை வகித்தார். புற்றுநோய் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் எம்.ரமேஷ் வரவேற்றார்.

இதில் அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் தனலெட்சுமி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜசேகரன், துறைத் தலைவர்கள் பாஸ்கர் (புற்றுநோய் கதிர்வீச்சு), சையது இப்ராகிம் (பொது அறுவை சிகிச்சை), சுமதி (மகப்பேறு அறுவை சிகிச்சை) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்