இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள தன்னார்வலர்களுக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி, இழப்பினை ஈடு செய்வதற்காக ‘இல்லம் தேடி கல்வி’ எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட இடைவெளியை போக்கும் இந்த திட்டத்தின்கீழ், தன்னார்வலர்களைக் கொண்டு, மாணவர்களின் கற்றல்திறன் மேம்படுத்தப்படவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ‘இல்லம் தேடி கல்வி" திட்டம் குறித்து கலைக்குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சேவையாற்ற விருப்பமுள்ள தன்னார்வலர்கள், illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம், என ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago