உலக கண் பார்வை தின மனித சங்கிலி :

By செய்திப்பிரிவு

உலக கண் பார்வை தினத்தையொட்டி திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி டைமண்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் பட்டர்பிளை ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து மனித சங்கிலியை நடத்தின.

நிகழ்ச்சிக்கு பேராயர் டேனியல் ஜெயராஜ் தலைமை வகித்தார். மாநகர காவல் துணை ஆணையர் சக்திவேல் மனித சங்கிலியை தொடங்கி வைத்தார்.

மருத்துவமனையின் இயக்குநர் பிரதீபா, நிர்வாக தலைவர் நெல்சன் ஜேசுதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, தங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்வோம் என உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.

ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெரால்டு விழிப்புணர்வு பலூனை பறக்கவிட்டார். ஆர்பி.எஸ். குழும இயக்குநர் மணி, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பிரபா, ரோட்டரி டைமண்ட் சிட்டி தலைவர் கிரிகோபிநாத், ரோட்டரி பட்டர்பிளை சங்கத் தலைவர் வனஜா தேவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்வின் நோக்கம் குறித்து உதவி இயக்குநர் அகிலன் அருண்குமார் பேசினார். ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாக அலுவலர் சுபா பிரபு செய்திருந்தார். முன்னதாக கண் மருத்துவர் ஆண்டனி வரவேற்றார். நிறைவாக மனிதவள மேம்பாட்டுப்பிரிவு அலுவலர் ஆர்த்தி நன்றி கூறினார்.

மனித சங்கிலி நிகழ்ச்சியில், கண் நலம் குறித்த சில முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்