தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் - ட்ரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு :

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையையொட்டி, புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக திருச்சி என்எஸ்பி சாலை, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

இவர்களின் பாதுகாப்பு கருதி கோட்டை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் தெப்பக்குளம் அருகே தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை மாநகர காவல்துறை ஆணையர் க.கார்த்திகேயன் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

திருச்சி கோட்டை பகுதியில் 127 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 800-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட சீருடை அணியாத போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கடைவீதிகளிலும், சாலைகளிலும் ட்ரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குற்றச் செயல்கள் நடைபெறாமல் முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடை வீதிகளுக்கு வரும் பொதுமக்கள் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்.

திருச்சி மாநகரில் 1,051 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன என்றார்.

அப்போது, துணை ஆணையர்கள் சக்திவேல், முத்தரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்