தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் முறையிடும் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார்.
நகராட்சி, பேருராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.600 நிர்ணயிக்க வேண்டும். அரசு அறிவித்த கரோன நிவாரண நிதி ஊக்கத்தொகை ரூ.15,000 உடனே வழங்க வேண்டும். பிஎப் பிடித்தம் செய்த கணக்குச் சீட்டு, இஎஸ்ஐ பிடித்தம் செய்த மருத்துவ அடையாள அட்டை வழங்க வேண்டும். ஒப்பந்த, சுயஉதவிக் குழு பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
நிர்வாகிகள் சின்னசாமி, மகாலிங்கம், பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் பாலசுப்பிர மணியன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் லெனின்குமார் முடித்து வைத்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ராஜசேகர், மாவட்ட பொருளாளர் தர்மராஜ், துணைச் செயலாளர் கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட பொருளாளர் முருகேசன், மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நகராட்சி, பேருராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்களுக்கு ஊதியமாக ரூ.600 நிர்ணயிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago