சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நுண்ணுயிரியல் துறை மாணவ, மாணவிகள் பங்குபெற்ற உலக உணவு தின கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அறிவியல் புல முதல்வர் பேராசிரியர் நிர்மலா பி. ரட்சகர் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து, பசி போக்குதலின் இன்றியமையாமை பற்றி எடுத்துரைத்தார். நுண்ணுயிரியல் துறைத்தலைவர் முனைவர் உமா தலைமையுரையில் உணவை வீணடிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். இளையோர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளரும் ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியருமான முனைவர் ஐயப்ப ராஜா 100 கோடி மக்கள் இவ்வுலகில் தினமும் ஒரு வேளை கூட சரியான உணவு கிடைக்காமல் உறங்கச் செல்லுகிறார்கள் என்று தெரிவித்தார்.
செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள் அன்புமலர், ‘பாரம்பரிய உணவுகள் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்’ என்ற தலைப்பிலும், கலை, ‘துரித உணவுகளின் கேடான விளைவுகள்‘ என்ற தலைப்பிலும் சசிரேகா, ‘உணவே மருந்து’ என்ற தலைப்பிலும் கருத்துரை நிகழ்த்தினர்.
சிதம்பர நகர செஞ்சிலுவை சங்க இயக்குநர் இளங்கோவன், நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் செந்தில்குமார், சங்கீதா, சுமதி, கொளஞ்சிநாதன்,சிவசுப்ரமணி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நுண்ணுயிரியியல் துறை உதவிப் பேராசிரியரும் யூத் க்ராஸ் திட்ட அலுவலருமான கணேஷ் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago