நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - மதுரையில் அக்.24-ல் திமுக ஆலோசனை கூட்டம் :

By செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக சார்பில் மதுரையில் வரும் அக்.24-ம் தேதி ஆலோசனை நடக்கவுள்ளது என மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

அண்மையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 90 சதவீதத்துக்கும் அதிகமான வெற்றியைப் பெற்றுள்ளனர். விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. மதுரை வடக்கு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் அக்.24-ல் காலை 11 மணிக்கு திருப்பாலை குறிஞ்சி மகாலில் நடக்கவுள்ளது.

கடந்த 5 மாதங்களில் திமுக அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச்செய்ய வேண்டும். வேட்பாளர் தேர்வு, தேர்தல் பணி, பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும்.

மேலும் தென் மண்டல அளவில் மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் சி.சிறைச்செல்வன் சிறந்த ஒன்றியச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு முதல்வரால் பாராட்டப்பட்டுள்ளார். அவருக்கு நிர்வாகிகள் பாராட்டுத் தெரிவிப்பர், என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்