தேனி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை ஏடுகள் குழுவின் ஆய்வுக் கூட்டம் நடந்தது. குழுத்தலைவர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆட்சியர் க.வீ.முரளீதரன், குழு உறுப்பினர்கள் வி.அமலு, பெ.பெரியபுள்ளான், கங்கவல்லி, நல்லதம்பி, எஸ்.தேன்மொழி, வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் குழுத் தலைவர் பேசியதாவது: தேனி மாவட்டத்தின் 14 இடங்களில் ரூ.428.58கோடி மதிப்பில் 4 ஆயிரத்து 491 வீடுகள் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு இவை விரைவில் வழங்கப்படும் என்றார்.
செய்தியாளர்களிடம் கூறுகையில், லோயர்கேம்ப்-மதுரை கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. சுமூகத் தீர்வு காணப்படும் என்றார்.
இதனைத் தொடர்ந்து கோம்பை, அழகாபுரி, தப்புக்குண்டு ஆகிய இடங்களில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், வைகை அணை கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றை குழுவினர் ஆய்வு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago