கோயில் நகைகளை உருக்க எதிர்ப்பு தெரிவித்து - இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

கோயில் நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரி வித்தும், அதை கைவிடக் கோரியும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன் இந்து முன்னணியினர் நேற்று ஆர்ப் பாட்டம் செய்தனர்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ர மணியம் தலைமை வகித்தார். இதில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் காடேஸ்வரா சுப்பிர மணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோயில் நகைகளை உருக் குவது உயர் நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதும், சட்ட விரோதமானதுமாகும்.

1977-ம் ஆண்டு கோயில் நகைகள் உருக்கப்பட்டு வங்கியில் இருப்பு வைக் கப்பட்டுள்ள தென அரசு தெரிவித்துள்ளது. அதற்குரிய வரவு, செலவு கணக்குகளை அரசு வெளியிட வேண்டும்.

ஊழல் செய்வதற்கே தங் கத்தை உருக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை இந்து முன்னணி தடுத்து நிறுத்தும். நகைகளை உருக்க வேகம் காட்டும் அரசு, கோயில் நிலங்களை மீட்க தீவிரம் காட்ட வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்