கரூரில் இன்று நடைபெறும் - மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் : அதிமுக முன்னாள் அமைச்சர் கோரிக்கை

கரூர் மாவட்ட ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளில் ஏற்கெனவே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 9, திமுக 3 இடங்களில் வெற்றி பெற்றன. இதில், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் என்.முத்துக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். அதன்பின், காலியாக இருந்த மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட முத்துக்குமார் தோல்வியடைந்தார். திமுக வெற்றி பெற்றது.

தற்போது மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (அக்.22) நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சவுந்தர்யாவை நேற்று சந்தித்து மனு அளித்தனர். தற்போது மாவட்ட ஊராட்சியில் அதிமுக 8, திமுக 4 என உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE