திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காவலர் வீரவணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீர வணக்க நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையாளர் என்.கே. செந்தாமரைக் கண்ணன், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிநபு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாநகர காவல் துணை ஆணையர்கள் டி.பி. சுரேஷ்குமார் ,கே. சுரேஷ்குமார், உள்ளிட்ட காவல்துறையினர் பங்கேற்று 54 குண்டுகள் முழங்க, பணியின் போது இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தென்காசி மாவட்டம் ஆய்க் குடி காவல் நிலைய வளாகத்தில் தென்காசி மாவட்டத்துக்கு புதிதாக காவலர் நீத்தார் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் காவல்துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நாகர்கோவில்
நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், ஏடிஎஸ்பி. ஈஸ்வரன், சைபர் கிரைம் ஏடிஎஸ்பி. சுந்தரம், மதுவிலக்கு ஏடிஎஸ்பி. வேல்முருகன் மற்றும் போலீஸார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய வளாகத் தில் உள்ள நினைவு ஸ்தூபி யில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகள் துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஏடிஎஸ்பிக்கள் கோபி, கார்த்திகேயன், இளங் கோவன், திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago