வள்ளியூர் ரயில்வே சுரங்கப் பாதையில் - தேங்கிய மழை நீரில் அரசு பேருந்து சிக்கியது : நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை நீடிப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட் டங்களில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் நேற்று மழை நீடித்தது. வள்ளியூரில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய தண்ணீரில் அரசுப் பேருந்து சிக்கியது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை நீடித்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைப் பகுதிகளிலும் பிறஇடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 2, மணிமுத்தாறு- 1, கொடுமுடியாறு- 10, சேரன் மகாதேவி- 5.40, நாங்குநேரி- 46, ராதாபுரம்- 11, களக்காடு- 14.2, மூலைக்கரைப்பட்டி- 64, பாளையங் கோட்டை- 10, திருநெல்வேலி- 9.40, ராமநதி- 2, கருப்பாநதி- 3, குண்டாறு- 2, அடவிநயினார்- 5, ஆய்க்குடி- 4, செங்கோட்டை- 1, தென்காசி- 3.8, சங்கரன்கோவில்- 89.4, சிவகிரி- 16.

நீடிக்கும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,198 கனஅடி தண்ணீர் நேற்று காலையில் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,667 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 138.30 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 444 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. நீர்மட்டம் 77.90 அடியாக இருந்தது.

மற்ற அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்):

சேர்வலாறு- 143.70 அடி (156 அடி), வடக்கு பச்சையாறு- 16.65 (50), நம்பியாறு- 10.36 (22.96), கொடுமுடியாறு- 50.50 (52.25), கடனா- 82.20 (85), ராமநதி- 73.25 (84), கருப்பாநதி- 65.95 (72), குண்டாறு- 36.10 (36.10), அடவிநயினார்- 131.50 (132.22). திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடைப் பணிகள் நடைபெறுவதால் கால்வாய்களில் பெருமளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட வில்லை. அணைகளின் பாதுகாப்பு கருதி தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வழக்கத்தைவிட கூடுத லாக தண்ணீர் பாய்ந்தோடு கிறது.

இதனிடையே வள்ளியூர், நாங்கு நேரி, பணகுடி, காவல்கிணறு, வடக்கன்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் ஒரு மணி நேரம் இடியுடன் கனமழை பெய்தது. இதனால் வள்ளியூர் ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

வள்ளியூரிலிருந்து ஆத்துக் குறிச்சிக்கு அவ்வழியாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்து தண்ணீரில் சிக்கியது. திடீரென்று தண்ணீர் பெருகியதால் நகர முடியாமல் பேருந்து சிக்கியதை அடுத்து, அதிலிருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்றுப் பேருந்தில் சென்றனர். இதையடுத்து சுரங்கப் பாதையை தற்காலிகமாக மூடி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE