அந்தியூர் அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை வசதி : மார்க்சிஸ்ட் மாநாட்டில் கோரிக்கை

By செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூர் தாலுகா மாநாட்டை, கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தொடங்கி வைத்தார்.

அந்தியூர் தாலுகா கமிட்டி உறுப்பினர் கே. குருசாமி கொடியேற்றி வைத்தார். தாலுகா செயலாளர் ஆர். முருகேசன் வேலையறிக்கையை முன்மொழிந்து பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி, மாநாட்டு கமிட்டி உறுப்பினர்கள் ஏ.கே.பழனிச்சாமி, ஆர்.மாரியப்பன், எஸ்.சித்தாயி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் 12 பேர் கொண்ட புதிய தாலுகா கமிட்டி மற்றும் தாலுகா கமிட்டியின் செயலாளராக ஆர்.முருகேசன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

அந்தியூர் பேரூராட்சி மற்றும் தாலுகா முழுவதும் உள்ள மக்களுக்கு தினசரி ஆற்றுக்குடிநீர் வழங்க வேண்டும். அந்தியூர் சமுதாயக் கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அந்தியூர் தாலுகாவில் யானை, காட்டுப்பன்றி, மயில் போன்றவற்றால் விவசாய பயிர்கள் சேதம் அடைவதை தடுத்து நிறுத்த வேண்டும். அந்தியூர் அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மேட்டூர் அணை, பவானிசாகர் அணைகளின் உபரி நீரைக் கொண்டு, அந்தியூர் ஏரிகளை நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பர்கூரை தனி ஒன்றியமாக செயல்படுத்த வேண்டும். அந்தியூரில் கலை அறிவியல் கல்லூரி, மின் மயானம் தொடங்க வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்