ஈரோட்டில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறும் சிறப்பு முகாமில் 1.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 6-வது சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை (22 -ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (23-ம் தேதி) என இரு நாட்கள் நடக்கிறது. இம்முகாமில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 84 நாட்கள் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் 28 நாட்கள் நிறைவடைந்து இருந்தால், இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள உணவு கட்டுப்பாடு ஏதுமில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago