கோயில் நகைகளை உருக்குவதைக் கண்டித்து - சேலத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் :

கோயில் நகைகளை உருக்கும் இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து, சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் அருகே இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னதாக சென்னையில் இருந்து தொடங்கிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், இந்து முன்னணி சேலம் கோட்டத் தலைவர் சந்தோஷ் குமார், பாஜக சேலம் மாநகர மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு, மேற்கு மாவட்ட பாஜக பார்வையாளர் கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்து முன்னணி மாநில தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக கோயில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகைகளை, சுவாமிக்கு அலங்காரம் செய்வதற்குத் தான் பயன்படுத்த வேண்டும். கோயில் நகைகளை உருக்கி அதை வங்கியில் வைப்பு வைத்து வருமானம் ஈட்டயிருப்பதாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு தங்கக் கட்டிகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இதுவரை தங்க நகைகள் உருக்கப்பட்டது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் கோயில்களுக்குச் சொந்தமாக 6 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 50 ஆயிரம் ஏக்கர் நிலம் காணாமல் போய்விட்டது. அதனை கண்டுபிடிக்க வேண்டும். கோயில் நகைகளை உருக்குவதைக் கண்டித்து வரும் 26- ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்