மதுரையில் ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல், காஸ் வழங்கக் கோரி தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இதற்கு ஏஐடியுசி ஆட்டோ சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.சித்திக் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கண்ணன், பொருளாளர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அரசு அனுமதியின்றி இயங்கும் பைக் டாக் சியை தடை செய்ய வேண்டும். ஆட்டோ எப்சி வேலை செய்வதற்கு நிதியுதவி ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், காஸ், விலை உயர்வுக்கேற்ப மீட்டர் கட்டணத்தை திருத்தம் செய்ய வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.7500 வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர் நலவாரியப் பதிவை எளிமைப்படுத்த வேண்டும். ஓய்வூதியமாக மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஏஐடியூசி சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.முருகன், மாவட்ட செயலாளர் ரா.முருகன், தாமஸ், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜோதிராமலிங்கம், குரு சாமி, இருளாண்டி, ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago