மறுவாக்கு எண்ணிக்கை கோரி மனு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைக்கருங்குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் வி.குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு விவரம்: கோட்டைக்கருங் குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு வி.குமார், எஸ்.மணியப்பன், ஏ.முருகன், என்.முருகன் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். வி.குமாருக்கு ஆட்டோ சின்னம், மணியப்பனுக்கு கை உருளை, ஏ. முருகனுக்கு பூட்டுசாவி, என். முருகனுக்கு ஏணி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் தெற்கு கள்ளிகுளம் தட்சணமாற நாடார் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டன. அப்போது ஒவ்வொரு பண்டல்களில் உள்ள வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து ஆட்சேபணை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நண்பகல் 12 மணியளவில் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட

ஏ. முருகன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வேட்பாளரும் எத்தனை வாக்குகள் பெற்றனர் என்பது கூட தெரிவிக்கப்படவில்லை. வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கையை நடத்தாமல் வாக்கு சீட்டு கட்டுகளை தனியாக எடுத்து சென்று ஒருதலைப்பட்சமாக முடிவு அறிவிக்கப்பட்டது. மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்