மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் :

பெண்களிடையே மார்பக புற்றுநோய் க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் “பிங்க் அக்டோபர்” என்று இம்மாதத்தை உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதையொட்டி திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சைத்துறை, கதிரியக்கவியல் துறை மற்றும் நோயியல் துறை, அகில இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஆகியவை இணைந்து மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை நடத்தின.

அரசு மருத்துவமனை வளாகத்தில் வெளிநோயாளிகள் பிரிவில் நடைபெற்ற இந்த முகாமை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மு. ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பொதுஅறுவை சிகிச்சைத் துறை தலைவர் அலெக்ஸ் ஆர்தர் எட்வர்ட், கதிரியக்கவியல் துறைத் தலைவர் நான்சி டோரா, நோயியல்துறைத் தலைவர் சுவாமிநாதன், சிறுநீரகவியல் துறைத் தலைவர் ராமசுப்பிரமணியன், அகில இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க திருநெல்வேலி கிளை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மார்பக பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு, மார்பக கட்டி உள்ளவர்களுக்கு மார்பக அல்ட்ராசோனோகிராம் எனும் ஸ்கேன் பரிசோதனையும், மார்பக கட்டியிலிருந்து திசு பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்