நெல்லையில் ஆன்மிக நூல் வெளியீட்டு விழா :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் நெல்லை துணி வணிகர் இலக்கிய வட்டம் மற்றும் தாமிரபரணி இலக்கிய மாமன்றத்தின் சார்பில் ‘இறைவன் விரும்பிய அடியார்’ என்ற ஆன்மிக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. துணி வணிகர் இலக்கிய வட்ட தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். தென் திருப்பதி மேலத் திருவேங்கடநாதபுரம் தலைமை அர்ச்சகர் முரளி, வி.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முத்தையா வரவேற்றார். திருக்கயிலாயப் பரம்பரை 103-வது குருமகாசந்நிதானம் ல சிவப்பிரகாச தேசிக சத்ய ஞானபரமாச்சார்ய சுவாமிகள் நூலை வெளியிட ம.தி.தா. இந்துக் கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி செயலாளர் மு.செல்லையா, சோனா சில்க்ஸ் அதிபர் க.சங்கரநாராயணன், மேலத்திருவேங்கடநாதபுரம் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் கு.சீனிவாசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பொருநை இலக்கிய வட்ட நிர்வாகி தளவாய் திருமலையப்பன், உலகத் திருக்குறள் தகவல் மைய நிர்வாகி பாப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் பொன்.வள்ளிநாயகம், கணேசன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நூலாசிரியர் பாமணி ஏற்புரையாற்றினார். மணிமாலா சிவராமன் நன்றி கூறினார்.

செங்கோட்டை

செங்கோட்டையைச் சேர்ந்த முத்தரசு எழுதிய ‘கவிதை முத்துக்கள்’ எனும் கவிதை நுால் வெளியீட்டு விழா செங்கோட்டை நூலகத்தில் நடைபெற்றது. வாசகா் வட்ட தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவா் ஆதிமூலம் முன்னிலை வகித்தார். நூலகா் ராமசாமி வரவேற்று பேசினார்.

சங்கரன்கோவில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராஜா நூலை வெளியிட முதல் பிரதியை குற்றாலம் ரோட்டரி கிளப் தலைவா் பிரகாஷ் பெற்றுக்கொண்டார். செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் ஷேக்ராஜா, எஸ்எஸ்ஏ திட்ட மேற்பார்வையாளா் ராஜேந்திரன், போட்டித் தேர்வு பொறுப்பாளா் விழுதுகள் சேகர், ஓவிய பயிற்சி பொறுப்பாளா் முருகையா, ஓவிய ஆசிரியர் ஜெயசிங், வல்லம் நேஷனல் பள்ளி தாளாளா் அப்துல்மஜீத், ஆசிரியா் மணிகண்டன், வழக்கறிஞர் சுபாஷ் சேகர் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நூல் ஆசிரியா் முத்தரசு ஏற்புரையாற்றினார். வாசகா் வட்ட பொருளாளா் பா.சுதாகா் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்