திருவண்ணாமலை அடுத்த ஆலத்தூர் கிராம சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொது மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாகியுள்ளது. மேலும், சாலையில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதுடன் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆலத்தூர் பொதுமக்கள், கிராம ஊராட்சி மற்றும் புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. மேலும், சாலையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோச மானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருவண்ணாமலை- காஞ்சி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அவ் வழியாகச் சென்ற வாகனங் களையும் சிறை பிடித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவலறிந்த திருவண்ணாமலை கிராமிய காவல் துறையினர் மற்றும் புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் உள்ளிட்டோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சேதமடைந்த சாலை சீர் செய்து தரப்படும் என உறுதியளித்ததுடன், அதற்கான பணிகளையும் தொடங்கியதால் மறியலை போராட்டத்தை பொது மக்கள் கைவிட்டனர்.சுமார் 2 மணி நேரம் நடை பெற்ற மறியல் முடிவுக்கு வந்த நிலையில் சாலை போக்குவரத்தை காவல் துறையினர் சரி செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago