தொழிற்சாலை உரிமத்தை ஆன்-லைன் மூலமாக வரும் 31-ம் தேதிக்குள் புதுப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் சீபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், வாழப்பாடி, காடையாம்பட்டி தாலுகாவில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் வரும் 2022-ம் ஆண்டுக்கான உரிமத்தை ஆன்-லைன் மூலம் வரும் 31-ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
உரிமத்தை dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உரிய உரிம கட்டணத்தை ஆன்-லைன் மூலம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும், புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago