மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கேரள மாநிலத்தில் பலத்த மழையால் செங்கோட்டை - புனலூர் ரயில்வே பிரிவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
நேற்று (19.10.2021) சென்னையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06101 சென்னை எழும்பூர் கொல்லம் சிறப்பு ரயில், இன்று (20.10.2021) கொல்லத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06102 கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆகியவை செங்கோட்டை - கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் நேற்று (19.10.2021) பாலக்காட்டில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06792 பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06791 திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி சிறப்பு ரயில் ஆகியவை திருநெல்வேலி - புனலூர் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago