வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருச்சியில் - 8-வது நாளாக விவசாயிகள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 8-வது நாளான நேற்று கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் போராட்டத் தில் ஈடுபட்ட விவசாயிகள் கார் மோதி கொல்லப்பட்டதைக் கண்டித்தும் மற்றும் விவசாயிகள் மீது காரை மோதிக் கொன்றவர்கள் மற்றும் அதைத் தூண்டியவர்கள் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு லாபக ரமான விலை வழங்க வேண் டும். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 46 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தேசிய- தென்னிந் திய நதிகள் இணைப்பு விவசா யிகள் சங்கத்தினர், திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சங்கத்தின் மாநில அலுவலக வளாகத்தில் அக்.12-ம் தேதி தொடங்கி நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் 8-வது நாளான நேற்று சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 17 பேர் தூக்கிலிட்டுக் கொள்வதுபோல தங்களது கழுத் தில் கயிற்றை மாட்டிக் கொண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்