தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் திருச்சி பெருநகர் வட்ட செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் ந.பெருமாள், செயலாளர் செல்வம், மண்டலச் செயலாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் அ.சேக்கிழார் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், கேங்மேன் பணியாளர்களை சொந்த மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். விடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தேர்வு பெற்றுள்ள 5 ஆயிரம் கேங்மேன்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் போனஸ் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். தற்காலிக பணியிட மாற்றங்களை தலைமை பொறியாளர் அறிவிப்பின்படி ரத்து செய்ய வேண்டும். அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். திருச்சி பெருநகர் வட்டத்தில் தொழிலாளர்களின் முதன்மை பட்டியல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago