நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் - நீதிபதி, உறுப்பினர் பணியிடம் நிரப்ப வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி, உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டியின் மகாசபைக் கூட்டம் சேலம் அஸ்தம்பட்டி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் இக்பால் ஆண்டறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில், ‘ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவிகள் சரிவர இயங்காததால், பொதுமக்கள் பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசு புதிய இயந்திரங்களை பொருத்தி தடையின்றி பொருட்களை வழங்க வேண்டும்.

நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில், நீதிபதி, உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் 90 நாட்களில் தீர்வு பெற முடியாத நிலை உள்ளது. எனவே, அரசு தனி கவனம் செலுத்தி, காலி இடங்களை நிரப்ப வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்