கடலூர் மாவட்டத்தில் உள்ள14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஊராட்சி செயலாளர்களுக்கு மாத ஊதியத்தை கருவூலம் மூலம் அரசு வழங்கிட வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்காக போடப்பட்ட அரசாணை என் 205-ஐ ரத்து செய்ய வேண்டும். ஊராட்சி செயலாளர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு நிலை, சிறப்புநிலைஊதியம் வழங்கிட வேண்டும்.ஊராட்சி ஒன்றியங்களில் 18 ஆண்டுகாலமாக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வரும் வட்டார மற்றும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் ரூ.20 ஆயிரம் வழங்கி இவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கி பணி யமர்த்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி வரும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்க அவர்களை காலமுறை ஊதியத்துக்குள் கொண்டுவர வேண்டும். கரோனா பேரிடரில்பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் அரசு அறிவித்த ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago