திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்குமா? : சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பதில்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல், அரியலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர்கள் சேர்க்கைக்கு அனு மதி பெற முயற்சித்து வருகிறோம் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத் துவக் கல்லூரி கட்டிடத்தை தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தொடங்கப்பட் டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் திண்டுக்கல், அரியலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட் டுமே இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டியுள்ளது. மற்ற ஏழு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.

விருதுநகர், கள்ளக்குறிச்சி, ஊட்டி ஆகிய மருத்துவ கல்லூரி களில் தலா 150 இடங்களும், ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர் ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் 100 இடங்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கூடுதலாக தலா 50 இடங்களை வழங்க வேண்டும் என தேசிய மருத்துவக் கழகத்திடம் வலியுறுத்தி வருகிறோம்.

திண்டுக்கல் உள்ளிட்ட நான்கு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் முழுமை அடையவில்லை. பணிகள் துரிதப்படுத்தப்படுவதால் நான்கு கல்லூரிகளுக்கும் இந்த ஆண்டே அனுமதி பெற முயற்சித்து வருகிறோம். அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் ஆற்றல் தடுப்பூசிக்கு மட்டுமே உள்ளது, என்றார்.

திண்டுக்கல் ஆட்சியர் ச.விசா கன், மருத்துவக் கல்லூரி முதல் வர் விஜயகுமார் உள்ளிட்டோர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்