மதுரை ஆயுதப்படை மைதானத் தில் நேற்று உங்கள் துறையில் முதல்வர் திட்டம் தொடர்பான காவல்துறையினர் குறை கேட்பு முகாம் தென்மண்டல காவல்துறை தலைவர் டி.எஸ்.அன்பு தலைமையில் நடைபெற்றது. இதில் தென் மண்டலத்துக்குட்பட்ட மாநகரம் மற்றும் மாவட்டங்களிலிருந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.
தென்மண்டல காவல்துறை தலைவர் நேரடியாக ஒவ்வொரு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் பணியிட மாறுதல், ஊதிய முரண்பாடு, பதவி உயர்வு மற்றும் துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட குறைகளை கேட்டு அவர்களிடமிருந்து 643 மனுக்களை பெற்றுக்கொண்டார். அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது தகுந்த பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago