கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை : பெரம்பலூர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மாவட்ட ஆட்சியர் ப. வெங்கடபிரியா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் ஆட்சியரிடம் அளித்த மனு:

கட்டிடம் கட்டுவதற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களான சிமென்ட், கம்பி, செங்கல், மணல், மின்சார பொருட்கள், பிவிசி பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை 20 முதல் 25 சதவீதம்வரை உயர்ந் துள்ளது. இதனால் கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலை மீட்டெடுக்கும்விதமாக கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக்கோரி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ்டிபிஐ கட்சி மாவட்ட துணைத் தலைவர் வி.களத்தூர் பாரூக் அளித்த மனு: வேப்பந்தட்டை வட்டம் வி. களத்தூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் உள்ள பயோ மெட்ரிக் கருவியில் ரேஷன்கார்டுதாரர்களின் கைரேகை பதிவாகவில்லை எனக் கூறுவதுடன், ஆதார் மையத்துக்குச் சென்று மீண்டும் பதிவு செய்யும்படி அலைக்கழிக்கிறார்கள். இதற்காக வேப்பந்தட்டைக்கும், பெரம்பலூருக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இக்கூட்டத்தில் பொதுமக்களிட மிருந்து மொத்தம் 254 மனுக்கள் பெறப் பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்