நெல்லையப்பர் கோயிலில் - ஐப்பசி திருக்கல்யாண திருவிழா பந்தல்கால் நடும் வைபவம் :

திருநெல்வேலி அருள்மிகு காந்திமதியம்மன் உடனுறை நெல்லையப்பர் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவுக்கான கால்நாட்டு வைபவம் நேற்று நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த ஆண்டுகரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இத்திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடத்தப்பட்டது. இவ்வாண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு அம்பாள் சந்நிதி அருகே உள்ள ஊஞ்சல் மண்டப முகப்பில் நேற்று கால்நாட்டு வைபவம் நடைபெற்றது. கோயில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

வரும் 22-ம் தேதி காலை 9 மணிக்கு அம்பாள் சந்நிதியில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகளும், கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கோயில் உட்பிரகாரத்தில் சுவாமி- அம்பாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.

வரும் நவம்பர் 1-ம் தேதிமதியம் 12 மணிக்கு சேரன்மகாதேவி சாலையில் உள்ள காட்சிமண்டபத்தில் தபசுக் காட்சி நடைபெறுகிறது. காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் இந்த வைபவம் கடந்த ஆண்டைப்போலவே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நாள் நவம்பர் 2-ம் தேதி அதிகாலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவமும், தொடர்ந்து 3 நாட்கள் ஊஞ்சல் உற்சவமும், நவம்பர் 5-ம் தேதி மறுவீடு பட்டினப்பிரவேசமும் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்