ஆரணி நகரம் மில்லர்ஸ் சாலை யில் குப்பை கழிவுகளை கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை, மில்லர்ஸ் சாலையில் உள்ள கண்ணகி நகர் மற்றும் அண்ணா நகர் குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படுகிறது. இதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குப்பை கழிவுகளை கொட்டுவதால், கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற் படுவதாகவும், சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் மற்றும் நோய் தொற்று பரவுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மில்லர்ஸ் சாலையில் நேற்று குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் கண்டித்தனர். அப்போது, அவர்களிடம் தொழி லாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள், மில்லர்ஸ் சாலையில் குப்பைகளை கொட்டி மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், குப்பைக் கழிவுகளை கொட்டுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ள இடத்தில் கொட்டாமல், குடியிருப்பு பகுதியில் கொட்டுவதை கண்டிக்கிறோம் என கூறி நகராட்சிக்கு எதிராக முழக்க மிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆரணி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago