கோவையில் புத்தக கண்காட்சி தொடக்கம் :

கோவை விஜயா பதிப்பகம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 45-வது ஆண்டு புத்தக கண்காட்சி கோவை ராஜவீதியில் உள்ள விஜயா பதிப்பக வளாகத்தில் நேற்று தொடங்கியது. கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார்.

மூன்று அரசுப்பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்கிய ஆட்சியர், கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டார்.

பிறகு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ‘கற்கை நன்றே’ என்ற தலைப்பில் பேசினார். விஜயா பதிப்பகம் நிறுவனர் மு.வேலாயுதம் மற்றும் புத்தக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். கண்காட்சி நாளை (அக்.19) வரை நடைபெறுகிறது. காலை 9.30 முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் புத்தகங்களை வாங்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்