கைத்தறி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வழங்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு ராசிபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் என்.ஆர்.ஆர். ஜீவானந்தம், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

ரேஷன் கடை பணியாளர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை உள்ளிட்ட படி உடனடியாக வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் வேலை செய்யும் நகை மதிப்பீட்டாளர்கள், இ-சேவை பணியாளர்களுக்கு முறையான ஊதியம் மற்றும் இதர சட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.

ஓய்வுபெற்ற கூட்டுறவு பணியாளர்களுக்கு கவுரவமான ஓய்வூதியம் வழங்க வேண்டும். அதற்கான நிதி மத்திய கூட்டுறவு வங்கியில் லாபத்தில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பணி உயர்வு வழங்காத பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். பணி வரன்முறை படுத்தாத பணியாளர்களை பணி வரன்முறைபடுத்த வேண்டும்.

பால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் வழங்கும் பால் முழுவதும் பெற்றுக் கொள்ள வேண்டும். கைத்தறி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.ரங்கசாமி, மாவட்ட பொருளாளர் சிவகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்