மன்னர் கல்லூரியில் உலக உணவு தின கருத்தரங்கு :

மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி யில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பத் துறை, நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் ஆகியவை சார்பில் உலக உணவு தினத்தை முன்னிட்டு இணையவழி உணவு கருத் தரங்கம் நடைபெற்றது.

முதல்வர் மனோகரன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் கோபி மணிவண்ணன், ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உலக உணவு தின குறிக்கோள் செயல்பாடுகள் பற்றி பேசினார். நெஸ்ட்லே ஊட்டச்சத்து நிபுணர் வர்ஷா சிறப்புரையாற்றினார். மேலும், சமச்சீர் உணவு, ஊட்டச்சத்துகளின் அவசியம், பெருந்தொற்று காலத்தில் நோய் எதிர்ப்பாற்றலை வழங்கிடும் உணவு வகைகள் பற்றி எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாணவர் கள், தொழில்முனைவோர் உள் பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உணவு தேவை மற்றும் உணவு வீணாவதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், பேராசிரியர்கள் பாரதிகணேஷ், ராகதீபா, சுப்ரஜனனி, செளஜன்யன் ஆகியோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்