கண்டவராயன்பட்டி வல்லநாட்டு கருப்பர் கோயில் - பெண்ணடிப் படையல் விழாவை // 40 ஆண்டுக்கு பின் கொண்டாட முடிவு :

By செய்திப்பிரிவு

40 ஆண்டுகளாக கொண்டாடப்படாமல் இருந்த கண்டவராயன்பட்டி வல்லநாட்டு கருப்பர் கோயில் பெண்ணடிப் படையல் விழாவை வரும் வைகாசி மாதம் கொண்டாடுவது என 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முடிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி வல்லநாட்டு கருப்பர் கோயில் பெண்ணடிப் படையல் விழா பல்வேறு காரணங்களால் கடந்த 40 ஆண்டுகளாக கொண்டாடப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று கோயில் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், கண்டவராயன்பட்டி, புதுப்பட்டி, நடுவிக்கோட்டை, சென்பகம்பேட்டை, நெடுமரம், சொக்கலிங்கபுரம், காளாப்பூர், சதுர்வேதமங்கலம், சிங்கம்புணரி, கட்டாணிப்பட்டி, மல்லாக்கோட்டை, அழகமாநகரி, பிடாரம்பட்டி உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். வரும் வைகாசி மாதம் வல்லநாட்டு கருப்பர் கோயிலில் பெண்ணடிப் படையல் விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக வல்லநாட்டு கருப்பருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்