துறை ரீதியான நடவடிக்கையில் மிகுந்த எச்சரிக்கை தேவை : உயர் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் போது உயர் அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுரை ஆயுதப்படைக் காவ லர் பி.தீனதயாளன், தனக்குத் தலைமைக் காவலராக பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், 1999-ல் இரண்டாம் நிலைக் காவலராகப் பணியில் சேர்ந்தேன். 2010-ல் முதல் நிலைக் காவலராகப் பதவி உயர்வு பெற்றேன். இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்தபோது என் மீது முன்னாள் மனைவி அளித்த வரதட்சணைப் புகாரின் பேரில் என்னைக் கைது செய் ததைச் சுட்டிக்காட்டி மதுரை ஆயுதப் படை துணை ஆணையர் 2008-ல் எனக்குக் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கினார்.

பின்னர் எனக்கு வழங்கப் பட்ட தண்டனையை டிஜிபி மாற்றியமைத்து எனது பணிப் பதிவேட்டில் கரும்புள்ளி குறிப்பிட உத்தரவிட்டார். இதை ரத்து செய்ய மாநில உள்துறையில் கருணை மனு அளித்தேன். எனது மனுவை உள்துறை முதன்மைச் செயலர் தள்ளுபடி செய்தார். அதை ரத்துசெய்து எனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் முன்னாள் மனைவிக்கு எதிராக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்த நிலையில், அவர் மீது வரதட்சணைப் புகார் அளிக்கப் பட்டது. இந்த வழக்கை நீதி மன்றம் விசாரித்து மனுதாரரை விடுவித்தது.

குடும்பப் பிரச்சினையால் பதிவான வழக்கில் அவர் விடு தலை செய்யப்பட்டதையும் கருத் தில் கொண்டிருக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மனுதாரருக்கு 12 வாரத்துக்குள் தலைமைக் காவ லராகப் பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத் தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்