அமராவதி ஆற்றை தூர் வாரும் திட்டம் செயல்படுத்தப்படும் : அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி

அமராவதி ஆற்றை தூர் வாரும் திட்டம் செயல்படுத்தப்படும். அப் போது ஆற்றில் கழிவுநீர் கலப் பது தடுக்கப்படும் என மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர் நகராட்சியில் ஒருநாள் ஒரு வார்டு திட்டத்தின் கீழ் கரூர் நகராட்சி 27-வது வார்டு வையாபுரி நகர் பகுதியில் சாக்கடை கால்வாய்கள் தூர் வாரும் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் வைத் துறை அமைச்சர் வி.செந் தில் பாலாஜி நடைபயிற்சி செய்து கொண்டே நேற்று பார்வையிட் டார். அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, சாலையோர டீ கடையில் டீ குடித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கரூர் மாநகராட்சியாக சந்திக்கும். கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். கரூர் நகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்ப டுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரூர் நகராட்சியில் பல ஆண்டுகளாக சாக்கடை கால் வாய்கள் தூர் வாரப்படாமல் 2 முதல் இரண்டரை அடி வரை மணல் சேர்ந்துள்ளது. இவற்றை போர்க்கால அடிப் படையில் அகற்றி மழைநீர் சீராக செல்ல மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்தவேண்டி உள்ளது.

அமராவதி ஆற்றை தூர் வாரும் திட்டம் செயல்படுத்தப்படும். அப் போது கழிவுநீர் கலப்பது தடுக் கப்பட்டு தூய்மைப்படுத்தப்படும்.

ஒரு நாள் ஒரு வார்டு திட்டத்தின் கீழ் கரூர் நகராட்சியில் சாக்கடை தூர் வாரும் பணிகள், தெருவிளக்கு அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரூர் நகராட்சியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி தேவைப்படுகிறது. அதை பெற முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்றார்.

கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, நகர் நல அலுவலர் லட்சியவர்ணா, பொறியாளர் கார்த்தி உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE