தமிழகத்தை மின்மிகை மாநிலம் என சொன்னவர்களால் விவசாயி களுக்கு இலவச மின் இணைப்பை கொடுக்க முடியவில்லை என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டினார்.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் நேற்று முன்தினம் மாலை 60 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணை வழங்குதல், மின் வாரியத்தில் பணிக்காலத்தில் உயிரிழந்த 11 ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குதல் மற்றும் எம்பியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள புதிய மின் விளக்குகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு, ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு மற்றும் கருணை அடிப்படையில் 11 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “இலவச மின் இணைப்பு கேட்டு கடந்த 10 ஆண்டுகளாக 4 லட்சம் விவசாயிகள் காத்திருந்தனர். மின்மிகை மாநிலம் என சொன் னவர்களால், விவசாயத்துக்கு இலவச மின் இணைப்பை கொடுக்க முடியவில்லை. ஆனால், ஆட்சி பொறுப்புக்கு வந்த 5 மாதங்களில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பையும் உடனடி யாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். அதன்படி, இந்த விழாவின் மூலமாக விவசாயி களுக்கு இலவச மின் இணைப்பு பெறுவதற்கான உத்தரவு வழங் கப்பட்டுள்ளது” என்றார்.
பின்னர் அவர், எம்பியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் அண்ணா நுழைவு வாயிலில் இருந்து தீபம் நகர் வரை பொறுத்தப்பட்ட தெருவிளக்கு களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
விழாவில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் காளிமுத்து, அண்ணாதுரை எம்பி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago