புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை :

கடலூர் மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்கும் விதமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விழா நாட்களில் கோயில்கள் மூடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் அனைத்து கோயில்களும் அனைத்து நாட்களும் திறக்க அரசு உத்தரவிட்டது.

புரட்டாசி மாதம் முழுவதும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் நேற்று புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை என்பதால் கோயில்களுக்கு சென்றனர். திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோயில், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயில், காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீரநாராயணபெருமாள் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் குவிந்து காலை முதலே சாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்