மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு : தாமதமாகும் கட்டிடப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவு

By செய்திப்பிரிவு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தில் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் நிதியுதவில் ‘டவர் பிளாக்’ கூடுதல் மருத்துவமனை கட்டிடம் கட்டப்படுகிறது. மேலும் மருத்துவக்கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிடம், புதிய நூலகம், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் விடுதி, பட்டப்படிப்பு மாணவர்கள், மாணவிகள் விடுதி ஆகிய புதிய கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.

இப்பணிகளை நேற்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன்பின் மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர், மருத்துவமனை டீன் ரத்தினவேலு மற்றும் துறை தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனையையும் அவர் பார்வையிட்டார்.

அதன்பின் அவர் கூறியதாவது: கரோனாவை பொறுத்தவரையில்தமிழகத்தில் நோய் தொற்று குறைந்து வருகிறது. சென்னை, கோவை மாவட்டத்தில் மட்டுமே 100-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் மக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக கடைபிடிக்காமல் அலட்சியமாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் தற்போது முகக்கவசத்தை முகத்தில் அணியாமல் கையில்தான் வைத்துள்ளனர். அருகில் உள்ள கேரள மாநிலத்தில் இன்னும் கரோனா தொற்று குறைவில்லை. அதனால் மீண்டும் இத்தொற்று நோய் பரவாமல் தடுக்க மக்கள் முகக்கவசத்தை அணிய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்