பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொலை வழக்குகள், சாதி ரீதியான கொலை வழக்குகள், பழிக்குப் பழியாக நடந்த கொலை வழக்குகளில் ஈடுபட்ட 78 பேர் நீதிமன்றக் காவலில் உள்ளனர். அதே போல் 66 பேருடைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முதல் வகுப்பு நிர்வாகத் துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் கூடாது என ஒரு வருடத்துக்கான நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்