நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நிய மனத்தில் திமுகவினர் அதிருப்தி அடைந் துள்ளனர்.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். உயர் நீதிமன்றக் கிளை, மாவட்ட நீதிமன்றம், தாலுகா நீதிமன்றங்களில் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பதவியில் இருந்து விலகினர். இந்த இடங்களில் புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இப்பதவிகளைப் பெறுவதில் திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அரசு வழக்கறிஞர்களுக்கான தேர்வு பட்டியல் உள்ளதால் பலரும் கடும் அதிருப் தியடைந்துள்ளனர்.
இது குறித்து திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
அரசு வழக்கறிஞர் பதவிக்கு திமுக வழக் கறிஞர் அணி மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட தகுதியான பலர் அடங்கிய பட்டியல் அந்தந்தப் பகுதி மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் மூலம் அளிக்கப்படுகிறது. மாநில திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் சட்டத் துறை அமைச்சர் வரை இந்த பட்டியல் செல்கிறது. இந்த பட்டியலில் உள்ளவர்களில் 90 சதவீதம் பேருக்கு வழக்கமாக நியமனம் கிடைத்துவிடும். ஆனால் உயர் நீதிமன் றத்துக்கு அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ள தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பலர் திமுகவுக்கு தொடர்பே இல்லாத வேறு கட்சி மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் மதுரை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு 26 வழக்கறிஞர்கள் நிய மனத்துக்கான பட்டியல் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மூலம் அனுப் பப்பட்டது. தற்போது 21 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை.
அமைச்சர் ஒருவரும், மாநகர் மாவட்டச் செயலாளரும் இணைந்து 9 பேர் பட்டியலை அளித்தும், ஒருவர் கூட அரசு வழக்கறிஞர் பட்டியலில் இடம் பெறாதது அவர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கட்சிக்கு தொடர்பில்லாத, மாவட்ட நிர்வாகிகள் சிபாரிசு செய்யாத பலரும் எப்படி அரசு வழக்கறிஞர் தேர்வு பட்டி யலில் இடம் பெறுகின்றனர் என்பது கட்சி நிர்வாகிகளிடையே குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன் தாக்கம் அனைத்து பதவிகளுக்கான நியமனமும் முடியும்போதுதான் தெரியும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago