மதுரை மாநகராட்சி பள்ளிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி :

By செய்திப்பிரிவு

மதுரை மாநகராட்சியில் நடந்த இளம் கலாம் அறிவியல் கண்காட்சியில் 24 பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவர்கள் தங்கள் அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.

அறிவியல் துறையில் மாணவர்களின் திறமையை வளர்க்கவும், ஊக்கு விக்கவும் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஹெச்.சி.எல். அறக்கட்டளை சார்பாக நவீன அறிவியல் கண்காட்சிகள் நடத் தப்படுகின்றன. அதுபோல், இந்த ஆண்டு இளம் கலாம் அறிவியல் கண் காட்சி வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இந்தக் கண்காட்சியில் மதுரை மாந கராட்சியின் உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள 24 பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இந்த அறிவியல் கண்காட்சியில் புதுமையான ஆற்றல், நவீன படைப்பு களை காட்சிப்படுத்தியிருந்தனர். மாணவர்களின் இந்தப் படைப்புகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. அறிவியல் சார்ந்த ஓவியங்கள் வரை யப்பட்டிருந்ததையும், அறிவியல் தொழில்நுட்பச் சாதனங்களைக் கொண்டு வைக்கப்பட்டிருந்த அறிவி யல் கண்காட்சியையும் மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் பார் வையிட்டு மாணவர்களிடம் உரை யாடினார். இந்நிகழ்ச்சியில் கல்வி அலுவலர் (பொ) ராஜேந்திரன், ஹெச்.சி.எல். நிறுவனச் செயல் இயக்குநர் திருமுருகன், உதவி மேலாளர் சாமு வேல் எபினேசர், திட்ட அலுவலர் பி.பிரபாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்