தமிழக காவல் துறையில் கடந்த 2008-ல் நேரடி நியமனமாக சுமார் 760 காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப் பட்டனர். இவர்களுக்கு 10 ஆண்டில் காவல் ஆய்வாளர் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற விதி முறை உள்ளது. இருப்பினும் இதுவரை பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.
இது குறித்து சில காவல் உதவி ஆய் வாளர்கள் கூறியதாவது:
காவல் துறையில் 2-ம் நிலை காவலர், சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், ஆய் வாளர், டிஎஸ்பி பணியிடங்களுக்கு பெரும்பாலும் நிர்ணயித்த காலத்தில் பதவி உயர்வு கிடைக்கிறது. எங்களுக்கான தேர்வின்போது, தேர்வான சுமார் 900 பெண் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு கிடை த்து, அவர்கள் மகளிர் மற்றும் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் பணிபு ரிகின்றனர். கடந்த 2008-ல் எங்களது பேட்ஜில் 760 பேர் தேர்வானோம். 160 பேர் சட்டம்-ஒழுங்கு பிரிவுக் கும், எஞ்சிய 443 பேர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கும் எஸ்.ஐ.களாக நிய மிக்கப்பட்டோம். 2016 முதல் 760 பேரும் உள்ளூர் காவல் நிலையங் களுக்கான எஸ்.ஐ.கள் என விதிமுறை மாற்றிய நிலையில், எங்களில் 35 பேருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. மீதம் உள்ளவர் களுக்கு இதுவரை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப் பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல் பட்டு, உடுமலைப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட தனிப் பிரிவு, குற்றப்புலனாய்வு, கியூ பிரிவு, மாவட்ட குற்றப் பிரிவு, குற்றப்பதிவேடு, காவல் கட்டுப்பாட்டு அறை, மது விலக்கு, நில அபகரிப்பு, உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு, சிபிசிஐடி, பொருளாதார குற்றம், சிறப்பு குற்றப் புலனாய்வு (சிசிஐடபிள்யூ), மனித உரிமை மீறல், போதைப் பொருள் தடுப்பு (என்ஐபி) உள்ளிட்ட 15 பிரிவுகளுக்கான ஆய்வாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டும், அதற்கான காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பதவி உயர்வு கிடைப்பது தாமதமாகிறது. புதிய மாவட்டங்களுக்கான காவல் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago