உணவு உற்பத்தி, அனை வருக்கும் உணவு, சரிவிகித சத்துக்களுடன் கூடிய உணவை உண்பதின் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் அக்டோபர் 16 அன்று உலக உணவு தின விழா கொண்டா டப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நிகழ்வை “இன்றைய உணவு சேமிப்பு, நாளைய வளமான வாழ்வு” என்ற கருத்துருவின் அடிப் படையில் கொண்டாட வேண் டும் என ரோமில் அமைந்துள்ள உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் மாத்தூர் கிராமத்தில் உலக உணவு தின விழா கொண்டாடப்பட்டது. கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், ஒரு கருத்துக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கருத்துக்காட்சியில் பாரம்பரிய உணவு வகைகள் மதிப்புக் கூட்டப்பட்ட சிறு தானிய உணவு வகைகள் மற்றும் சரிவிகித சத்தான உணவின் அவசியம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. காய்கறிகள், பழங்களைக் கொண்ட மாறுவேடப் போட்டி, கோலப்போட்டிகள் கிராம மக்களை வெகுவாக கவர்ந் தன. சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் சு.அமுதா இந்த நிகழ்வினைத் தொடங்கி வைத்து பேசு கையில், ‘‘அரிசியை மட்டும் உட்கொள்ளாமல் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புகள் கொண்ட சிறுதானியங்கள், பயறு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அதுதான் உடலுக்கு நிரந்தர ஆரோக்கி யத்தை தரும்,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago