திருநெல்வேலியில் அனைத்து காப்பக நிர்வாகிகளுடன் மாநகர காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடை பெற்ற கலந்தாய்வு கூட்டத்துக்கு மாநகர காவல் ஆணையர் என்.கே. செந்தாமரைகண்ணன் தலைமை வகித்தார்.
திருநெல்வேலி மாநகர பகுதியில் செயல்பட்டு வரும் பெண்குழந்தைகள், சிறுவர்கள், ஆதரவற் றோர்கள், மாற்றுத்திறனா ளிகள், முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கான 17 காப்பகங்களில் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் காவல்துறை ஆணையர் பேசும்போது, ‘‘காப்பகத்தில் தங்கியுள்ளவர் களின் விவரங்களை சேகரித்து, தேவையான உடை, பாதுகாப்பு, தண்ணீர் வசதி, விளையாட்டு உபகரணங்கள், கணினி வசதி, போர்வைகள், படுக்கை வசதி போன்ற குறைகளை கேட்டறிந்து அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் டி.பி. சுரேஷ்குமார், கூடுதல் காவல் துணை ஆணையாளர் சங்கர், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர், குழந்தைகள் நலக்குழுமத் தலைவர் சந்திரகுமார், திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் , காவல் ஆய்வாளர் ஆன்டனி ஜெகதா பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago