திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம் :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்ட (வடக்கு, தெற்கு) திமுக செயற் குழுக் கூட்டம் திருவண்ணா மலையில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். துணை சபாநாயகர் கு.பிச் சாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் (வடக்கு) தரணிவேந்தன் வரவேற்றார். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், “9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 95 சதவீதத்துக்கு மேல் திமுக வெற்றி பெற காரணமாக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தேர்தல் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவித்தும், நடைபெற உள்ள நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றிக்கு பாடுபடுவது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், அண்ணாதுரை எம்பி, மருத்துவர் அணி துணைத் தலைவர் கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் தரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்