தற்காலிக பட்டாசு கடை : உரிமம் பெற காலக்கெடு நீட்டிப்பு :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இம்மாதம் 22-ம் தேதி கடைசி நாள் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடி பொருட்கள் விதிகள் 2008-ன் படி தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்புபவர்கள் உரிமம் கோரி இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப் பிக்க கடந்த 30-ம் தேதிவரை கடைசி நாள் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, இந்த காலக்கெடு வரும் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உரிமம் கோர விருப்பம் உள்ளவர்கள் கடையின் அமைவிட சாலை வசதி, சுற்றுப்புறங்கள் குறித்த வரைபடம் மற்றும் கட்டிடத்துக்கான ப்ளூ பிரின்ட் நகல் 6, சொந்த இடமாக இருந்தால் அதற்கான ஆவணங்கள் அல்லது வாடகை கட்டிடமாக இருந்தால் ஒப்பந்த உரிமம் ஆவணம், பட்டாசு கடை நடத்த உரிமக் கட்டணம் ரூ.500 செலுத்தியதற்கான அசல் செலான், இருப்பிட ஆதார நகல், வரி ரசீது, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதிக்குப் பிறகு ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்க முடியாது’’ என தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE