வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட வாரத்தின் ஏழு நாட்களும் கோயில் களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதால் விஜயதசமி தினமான நேற்று மதுரை மீனாட்சியம்மன், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில்களில் பக்தர்கள் அதிகளவில் வந்து தரிசனம் செய்தனர்.
கரோனா பரவல் தடுப்பு நடவ டிக்கை காரணமாக கோயில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அரசு தடை விதித்தது. கரோனா பரவல் குறைந்ததை அடுத்து அனைத்து நாட்களிலும் கோயில்களில் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையேற்று விஜயதசமி தினமான நேற்று வெள்ளிக்கிழமை முதல் இந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு கோயில் களிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து குடும் பத்துடன் வந்திருந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், திருப்பரங்குன்றம், அழகர் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்பு காலை 6 மணியில் இருந்து கோயிலுக்குள் அனுமதிக்கப்பட் டனர்.
பக்தர்கள் அனைவரும் முகக்க வசம் அணிந்து இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவதற்கான தடை நீடிக்கிறது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago