பிரதமர் விழாவை புறக்கணித்த தொழிற்சங்கங்கள் :

By செய்திப்பிரிவு

நாட்டில் உள்ள படைக்கலன் தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷன்களாக மாற்றி பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி அனைத்து படைக்கலன் தொழிற்சாலைகளிலும் காணொலி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

திருச்சி நவல்பட்டில் உள்ள மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தி இந்தியா நிறுவனம் (துப்பாக்கித் தொழிற்சாலை) மற்றும் முனிசியன் இந்தியா நிறுவனம் (எச்இபிஎப்) ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து படைக்கலன் தொழிற்சாலைகளில் பணியாற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் பிரதமர் பங்கேற்ற இந்த விழாவை புறக்கணித்தன.

இதுகுறித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் இரணியன் கூறியது:

நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் படைக்கலன் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக்குவதை எதிர்க்கும் வகையில் அகில இந்திய தொழிற்சங்க சம்மேளனங்களின் ஒருமித்த முடிவின்படி 4 லட்சம் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கறுப்புப் பட்டை அணிந்து, பிரதமரின் விழாவையும் புறக்கணித்துள்ளோம். அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து தொழிற்சங்கங்கள் முடிவெடுக்கும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்